Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Monday, September 26, 2011

கல்வி திருவிழா 2011


அஸ்ஸலாமு அலைக்கும்..................

கல்வி திருவிழா 2011 
 அல்லாஹ்வின் திருப்பெயரால் .....03 -09 -2011 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இனிதே நடை பெற்றது..........
மௌலவி முகமத் மைதீன் பாகவி தொகுத்து வழங்குகிறார் .......

மௌலவி மக்தூம் ஞானியார் உலவி அவர்கள் தலைமை தாங்க....
ம.த.கி.புரம் ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது & துனை- தலைவர் கமால்- முன்னிலை வகிக்க ...... இனிதே ஆரம்பமானது .......



 மௌலவி மக்தூம் ஞானியார் உலவி              

அமர்வு - 1 

மௌலவி பாராட்டு விழா 
இந்த வருடம் மௌலவி ஆலிம் பட்டம் பெற்ற 
மௌலவி ரஹ்மதுல்லாஹ் மன்பஈ அவர்களை வாழ்த்தி 
மௌலவி அப்துர் ரஹ்மான் உலவி , மௌலவி முபாரக் அலி ஸலாஹி,அப்துல் லத்திப் சலாஹி அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்
ம.த.கி.புரம் உலமாக்கள் மேடையில் .........
மௌலவி ஹாபிழ் அப்துல் ரஹ்மான் உலவி எழிச்சி உரை நிகழ்த்துகிறார்
மௌலவி முபாரக் ஸலாஹி வாழ்த்துகிறார்
மௌலவி ரஹ்மதுல்லாஹ் மன்பஈ அவர்களுக்கு C .M .N .சலீம் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்கள் 

C.M.N. Salim அவர்கள் நினைவு பரிசு வழங்கும்போது

 இதை தொடர்ந்து ஹிதாயத் கலை குழுவின் சார்பில் கலை நிகழ்ச்சி நடல்பெற்றது  அல்ஹம்துளிலாஹ்.......
  
ஹிதாயத் கலை குழு

ஹிதாயத் கலை குழு

ஹிதாயத் கலை குழு
 

கருத்தரங்கம் 
தலைப்பு :-  குடும்பத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது எது ?
 நல்ல தலைமுறைகளை உருவாக்குவது!
றவுகளை வலுபடுதுவது !
பொருளாதரத்தை வலுபடுதுவது!
 நடுவர் :- மௌலவி நசிர் அஹ்மத் ஜமாலி அவர்கள் 






















மௌலவி நசிர் அஹ்மத் ஜமாலி அவர்கள்
மௌலவி நசிர் அஹ்மத் பைஜி பேசுகிறார் 
சகோ . முகமது முஸ்தபா பேசுகிறார்
மௌலவி வலியுல்லாஹ் ஸலாஹி பேசுகிறார்
சகோ .முகமத் தாரிக் பேசுகிறார்
இதை தொடர்ந்து இஹ்சான் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது .....அல்ஹம்துளிலாஹ்....
 











இதை தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.......





இறுதி அமர்வு - கல்வி விழுப்புணர்வு அரங்கம் ....
மதிப்பிற்குரிய கல்வியாளர் C .M .N .சலீம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .......










C . M . N . சலீம் அவர்களின் உரையில் ........

மகாராஜபுரம் , தம்பிப்பட்டி , கிருஷ்ணபுரம் உலமாக்கள் சேர்ந்து ஒரு அரபி மதரசா & இஸ்லாமிக் ஸ்கூல் உருவாக்க வேண்டும் என்று விளக்கினார் .

துஆவுடன் கல்வி மாநாடு நிறைவு பெற்றது ......
அல்ஹம்தூலிலஹ் ..................

தொகுப்பு :- முஹமது இல்யாஸ் - கத்தார்
 










Sunday, September 4, 2011

ஹிஜாப் !!! ..........

ஹிஜாப் !!!




பத்திரமாயிருக்கிறேன்...

எனக்குள் - நான்

மிக மிகப்பத்திரமாய்....!!!



எச்சில் இலைமீதான

இலையான்களைப்போல

எவர் கண்ணும்

என்னை

அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!



டீக்கடை தாண்டி

நடந்து போகையில்...

எல்லோர் கவனமும் பறித்து

என்னைப்பற்றியே

விமர்சித்துத் தொலைத்து

பாவங்களால் நிரம்பிவழிய...

வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!



என்னைப்

பின்தொடர்ந்து வா...

விசிலடி..!!!!

கேலிசெய்....!!!

என யாரையும்...

என் உடைகளால்

சீண்டிவிடுவதில்லை நான்...!!!



வகுப்பறைகளிலும்...

பாடப்புத்தகம் மீதான

அடுத்தவர் கண்களை

ஒருபோதும்

கிழித்துப்போடுவதில்லை-நான்!!!



விழிகளால் ஊரே ரசித்து...

கழித்துப்போட்ட

எச்சில் பண்டமாய்

எப்போதும் இருந்ததில்லை - நான்!!!



அல்லாஹ்வின் கட்டளைகளில்;

கணவனின் கண்களில்;

நான் மிகப்பெரும்

அழகியாய்

உயர்ந்து நிற்கிறேன்...!!!



அறியாமையினால்;

இவர்கள்தான்

உரத்துக்கூவுகிறார்கள்....

ஹிஜாப்

அடக்குமுறையென்று!!!!!!!!!



பாவம் அவர்கள்....;

.......................

அநாவசிய பார்வைகளை....

அந்நியரின் விமர்சனங்களை ....

அனாச்சாரங்களை ....

அடக்கிவைக்கும்

அதிஉன்னத ஆயுதம்....

ஹிஜாப்

என்பதை அறியாமல்....!!!!



நன்றி : றஹீமா பைஷால்

From Satyamargam



Monday, August 29, 2011

Education Festival 2011

அஸ்ஸலாமு  அழைக்கும் ....

இன்ஷா அல்லாஹ்........

03 -09 -2011 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ........

மகவை மாநகரில்.........

கல்வி திருவிழா 2011


சிறப்புரை :-

CMN SALIM




மேலும் இந்த கல்வி அறக்கட்டளை வளர dua &  பொருளாதார உதவி செய்து அல்லாஹ்விடம் நற்கூலி அடையுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்





Saturday, July 30, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?

ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் 

வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் 

இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். 

இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.





இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது

Sunday, February 6, 2011

மூணு நாளா இடுப்பை ஒடிச்சுப்புட்டாங்க…!

பெருநாள் அன்னிக்கு கூட எங்களுக்கு நிம்மதி இல்லாமப் போச்சு. இந்தப் புள்ளைங்கள பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம். தெனமும் எழும்புனா புள்ளைங்கள வேலைக்கு அனுப்புறது, துணி தொவைக்கிறது, அப்புறம் மத்தியான சாப்பாடு, நைட்டு சாப்பாடுன்னு எப்ப பார்த்தாலும் மிசின் மாதிரி அதையே திருப்பி திருப்பி செஞ்சுக்கிட்டு கிடக்கிறோம். ஏன்டா பொம்பளயா பொறந்தம்னு வெறுத்துப் போச்சு. ஒரு நாளு படுத்துகிட்டா கூட ஊடு நாறிப் போவுது.




முன்னாலெல்லாம் துணிமணிங்க கொஞ்சமாத்தான் இருக்கும். இந்தக் காலத்துல 5 பேருக்கே தெனமும் 10-15 துணி சேருது. கை காலெல்லாம் வலிக்குது.



நான் இந்த கடிதத்த ஒங்களுக்கு ஏன் எழுதினேன்னா இந்த வருசம் ஹஜ் பெருநாள்ல எங்க ஊட்ல நடந்த கொடுமையை எல்லாத்துக்கும் சொல்லனும்னுதான் எழுதுறேன். நான் எழுதினத ஒங்க பத்திரிகையிலே அப்படியே போடுங்க!



எங்க வீட்டுல என்னுடைய மூத்த பையன் தவ்ஹீது ஜமாஅத்துல இருக்கான். இரண்டாவது பையனுக்கு PJ அண்ணன பிடிக்காது. அதனால “ஜாக்” அமைப்பில இருக்கான். எங்க வீட்டுக்காரரு ஜமாஅத்து நிர்வாகத்துக்கு பயந்துகிட்டு அவங்க சொல்லுறதுக்கு தலைய ஆட்டுவாரு. அப்படின்னா ஒரு நிமிசம் என் நிலமைய கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க!



இந்த ஹஜ்ஜுப் பெருநாள் வந்துச்சு பாருங்க. மூணு நாளா நான் படாதபாடு பட்டுட்டேன்.



என் கஷ்டத்தை நான் யாருகிட்ட போய் பொலம்புறதுன்னு தெரியல.



மொத நாலு செவ்வாக்கிழமை என்னோட ரெண்டாவது பையன் “ம்மா இன்னிக்கு தான் பெருநாள். வா தொழுகப் போவோம்னு” கூப்புட்டான். சரி, அவன் மனசு நோக கூடாதுன்னு போய் தொழுதுட்டு வந்து கறி வாங்கி ஆக்கி கொடுத்தேன். ரெண்டாவது நாளு புதன்கிழமை ஊரே பெருநாள் கொண்டாடினிச்சு. நானும் என் வீட்டுக்காரரும் எங்க வீட்டுல இன்னொரு ஆள் இருக்கு. ஒங்க கல்வி நிகழ்ச்சிய பார்த்து காலேஜ்ல சேர்த்துவுட்டு இப்ப காசு காசுன்னு என் உசுர வாங்கறா! என் பொம்பள புள்ளைதான். நாங்க மூணு பேருமா சேர்ந்து போய் தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி வாங்கி பிரியாணி வச்சு சமைச்சு முடிக்க 4 மணியாச்சு. நான் ஒருத்தி மட்டும் கெடந்து அவ்வளவு வேலையும் பார்த்து முடிக்க அம்புட்டு நேரமாச்சு.



நான் வேலையில்லாம பெத்தேனே ஒரு பொம்புள புள்ளைய… தெண்டம்! ஒரு வேல பார்க்க மாட்டேங்கிறா. எந்த நேரமும் டி.வி.தான் பார்க்கிறா. என்னத்த சொல்றது.



மூனாவது நாளு காலயில மூத்த பையன் வந்து இன்னிக்குதாம்மா பெருநாளுன்னு சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல. அப்ப நேத்து நாங்க தொழுவுனது என்னான்னு கேட்டேன். அது டூப்பிளிகேட்டுன்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துச்சு. ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டேன். நீ தொழுவ வர்ரீயா இல்லியான்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அவங்க கூப்புட்டவுடன் போய் தொழுவுன மாதிரி எங்கூடயும் வான்னு கையபுடிச்சு இழுத்தான். சரின்னு அவங்கூடயும் போய் மூணாவது நாளா தவ்ஹீத் ஜமாஅத் நடத்துன தொழுகையை தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி எடுத்து ஆக்கி கொடுத்து மூனு நாளா என் இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சுங்க. இனி என்னால தாங்க முடியாது.



என்ன பெத்த ராசா மாருவளா…! நீங்க சமுதாயத்துக்கு தொண்டு செய்யறது எனக்கு நல்லா தெரியுது. அத ஒன்னும் நான் குத்தஞ்சொல்லல. ஆனா என்னைய மாதிரி பொம்பளைங்கள கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க! எங்க பயலுகளுக்கு நீங்க என்னாத்த சொல்லிக் கொடுக்கறீங்களோ… எங்க உசிரு போவுது.



சொர்க்கத்துக்கு வழிகாட்டுறோம்னு சொல்லி எல்லாருமா சேர்ந்து எங்களுக்கு இங்கயே நரக வேதனைய அனுபவிக்க வெச்சுட்டீங்களே! இது ஒங்களுக்கு நாயமா படுதா?



எல்லா மக்களும் ஒரே நாள்ல பெருநாள் கொண்டாடினாக்கா நாங்க பொம்பளைங்க சேர்ந்து, நீங்க, ஜமாஅத்காரங்க, தலைவருங்க, அமைப்பை நடத்துறவுங்க எல்லாரும் சொர்க்கத்துக்கு போவனும்னு துவா செய்வம்ல. இன்னொரு முக்கியமான விசயமுங்க.



எங்க வீட்டுல தொல்லை தாங்க முடியலங்க. வாப்பாவும் மகனுங்களும் அடிச்சுக்கிறாங்க. வாப்பா ஒன்னு சொன்னா அதுக்கு மார்க்கத்துல ஆதாரம் எங்கன்னு என் பசங்க கேக்கறானுங்க. என் வீட்டுக்காரரு அந்த காலத்து மனுசன். ஏதோ அவருக்கு ஹஜரத்மாரு சொன்ன மார்க்கம்தான் தெரியும். அறுபது வயசாகற அவருகிட்ட போய் ஆதாரம் குடுன்னு கேட்டா அத எந்த கடையில வாங்குறதுன்னு கேக்குறாரு. அவருக்கு கோவம்தான் வருது. வீட்டுல எப்ப பார்த்தாலும் ஒரே பெரச்சனைதான்.



ஒங்க அமைப்புல பயான் செய்யும்போது எல்லாரும் ஒத்துமையா, பொறுமையா இருங்கன்னு சொல்லிக் கொடுங்க. பெரியவங்களயும் பெத்தவங்களயும் மதிக்கனும்னு சொல்லிக் கொடுங்க.



இததானே நபியும் சொல்லித் தந்தாங்க.



வேதனையுடன்

பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜொகரா

வண்ணாரப்பேட்டை.

சென்னை.



Wednesday, February 2, 2011

ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்...............





ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்.................




அல்லஹ்வுடைய கிருபையால் 16.01.2001 ஞாயிற்று அன்று ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக "ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்" பள்ளிவாசல் தோப்பில்  வைத்து இனிதே நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!!!



சகோ . "ஷாஜஹான்" மற்றும் சகோ."அப்துஷ்ஷுக்கூர்" ஆகியோரின் ஆலோசனைப்படி, பள்ளிவாசல் தோப்பில்  வைத்து இளைஞர்களுக்கென்று தனியாக ஒருநாள் தர்பியா ப்ரொகிராம் நடத்த வேண்டும் என முடிவெடுக்கபட்டது. அதனடிப்படையில் 16.01.2011 ஞாயிறு அன்று மதிய உணவோடு தர்பியா ப்ரொகிராம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மௌலானா மௌலவி ஜாபர் அலி  மிஸ்பாஹி

அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும் தம்பிபட்டி
ஜும்மா பள்ளிவாசல் இமாம்  முஹமது ஜமீல் பைஜி  மற்றும் மகாராஜபுரம் பள்ளிவாசல் ஹஜ்ரத் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

முதல் அமர்விலே கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம்.முதல் அமர்வில் பல அருமையான கேள்விகள் இளைஞர்கள் கேட்டார்கள். அதற்கு அருமையான விளக்கங்களை மௌலானா மௌலவி  ஜாபர் அலி மிஸ்பாஹி அவர்கள் அளித்தார்கள் . கேள்வி-பதில் நிகழ்ச்சியோடு முத்ல் அமர்வு இனிதே முடிவடைந்தது.பின்பு லுஹர் தொழுகை நடைபெற்றது.






மதிய உணவுக்கு பின் இரண்டாம் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் "இஸ்லாத்தில் இளைஞர்கள் பங்கு" என்ற தலைப்பில் மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி அவர்கள் அருமையாக  உரையாற்றினார்கள்.



சமையல் பொறுப்பை "முஜிபுர் ரஹ்மான்"(நமதூரில் புதிதாக ஹோட்டல் கடை ஆரம்பித்துள்ளார்) ஏற்றுக்கொண்டார்.அல்லாஹ் அவருக்கு அபிவிருத்தியை வழங்குவானாக!

ப்ரோக்ராமில் சில அற்புதமான காட்சிகள்.........












பாவிப் பயலுக…!

பாவிப் பயலுக…!


அஸ்ஸலாமு அலைக்கும்


போன தடவ என் கடிதத்தை ஒங்க பத்திரிக்கையில அப்படியே போட்டுட்டிங்களாமே! எங்க பயலுக வந்து கத்திகிட்டு கெடந்தானுக. இனி என் மனசுல வர்ரது எல்லாத்தையும் எழுதரேன். நல்லார்ந்தா போடுங்க.



முந்தா நாளு என் ஊட்டுக்கு எங்க சொந்தக்காரங்க கும்பலா வந்தாங்க. அவங்க பொண்ணுக்கு கலியாணம் மூச்சி மூனு மாசமாகல, அதுக்குள்ள அந்த பாவிப்பய தலாக் உட்டுட்டானாம்! நம்ம சமுதாயத்துல இப்ப இதுமாதிரி நெறைய நடக்குதுங்க.



நல்லா படிச்ச பயலுகதேன்… இப்படி பன்றானுக. என்னாத்த படிச்சானுகளோ தெரியல. எத படிக்கனுமோ அதபடிக்காம வேற எல்லாத்தையும் படிக்கிறானுக. பொசுக்கு பொசுக்குனு தலாக் உடுறானுக. பொண்டாடிக்கு சோறு ஆக்க தெரியலனா தலாக்! சோத்துல உப்பு இல்லனா தலாக்! இப்படி உப்பு சப்பு இல்லாததுக்கு எல்லாம் தலாக் உடுறானுக.



ஏம்மா ஒன்ன தலாக் உட்டான்னு… கேட்டேன். அந்த பயலோட அம்மா முன்னால இந்த பொண்ணு கால்மேல கால்போட்டு ஒக்கார்ந்து இருந்ததாம். அதனால அவ புருசன் தலாக் உட்டுட்டானாம்! ஒன்னோட கால்மேல தானே ஒன்னோட காலபோட்டேன்னு கேட்டேன், அந்த புள்ள சிரிக்குது.



இதுக்கெல்லாம் தலாக் உட்ட அந்த பயல எதால அடிக்குறதுன்னே தெரியல. புதுசா கெடச்ச பூவ இப்படி கசக்கி எடுத்துட்டு தலாக் உட்டுட்டானே உருப்படுவானா அவன்?



அந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி தான் இப்போ எல்லா எடத்திலேயும் அதிகமா நடக்குது. இத யாராலையும் தடுக்க முடியல. கலியாணத்துல லட்சம் லட்சமா வெக்கமில்லாம காசு வாங்குரானுக… நாங்க வயிறு எரிஞ்சு நாசமா போகனும்னு சொல்லித்தேன் தர்ரோம். அப்ப கூட எங்க பொண்ணுகள வெச்சு ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டேனுங்காரனுக. சில ஊர்கள்ல ஹஜரத்துமார்களும் கைக்கூலி வாங்குறாங்க. இந்த அநியாயத்தை எந்த ஜமாத்காரங்களும் ஹஜரத் மார்களும் கேக்கமாட்டேங்கராங்க.



கலியாணம் பண்ணி 6 மாசம் 1 வருசதுல எல்லாம் தலாக் உடுறானுக பாவிப்பயலுக. ஷரிஅத் கோர்ட்டுன்னு மவுண்ட் ரோடு, மக்கா பள்ளியில நடத்துராங்க/ அவங்க எவ்வளவு சொன்

னாலும் இந்த பயலுகளும் அவனுகள பெத்தவங்களும் யாருக்கும் கட்டுப்பட மாட்டேங்கராங்க… இவனுகள யாராலையும் கட்டுப்படுத்த முடியல.



இந்தப் பொண்ணுகளும் சும்மா இருக்க மாட்டாளுக. இப்ப மொளச்சு வர்ரது எல்லாம் பிஞ்சியிலேயே பளுத்ததுக. படிச்சுப் புட்டோம்ங்கர திமிரு ஜாஸ்தி. மாப்புள்ள கிட்ட எதுக்கு எடுத்தாலும் சண்டைக்கு நிக்கிராளுக. மாமியாகாரிய மதிக்கிறதே இல்ல.



கலியாணம் மூச்ச உடனே ‘வா தனிக்குடித்தனம் போவோம்’னு மாப்பிள்ளகிட்ட தலையாண மந்திரம் ஓதுறதுன்னு அநியாயம் பன்றாளுக. இப்படி பன்னினாக்க எங்கேந்து சேர்ந்து வாழரது? குடும்பம் எப்படி உருப்படும்.



அல்லா தான் காப்பாத்தணும்.



காசு பணம் சம்பாதிக்கிறது எப்படின்னுதேன் இப்ப உள்ள பயலுக தெரிஞ்சு வெச்சிருக்கானுக. பொண்டாட்டி, புள்ள, குடும்பம், ஒறவுக்காரங்க இதைப் பாக்குறதுக்கு அவனுகளுக்கு எங்க நேரம்?



கலியாணம்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுறோம். ஆனா இந்த காலத்துல ஆறு மாசங்கூட சேர்ந்து ஓட மாட்டேங்குது.



எனக்கு கலியாணம் மூச்சி 45 வருமாச்சு. தெனமும் எனக்கும் என் ஊட்டுக்காரருக்கும் சண்டை வரத்தேன் செய்யும். ஆனா ஒரு நாளு கூட அவரு இல்லாம நான் சாப்பிட்டதில்லை. அடிச்சாலும் புடிச்சாலும் என் மாப்புள்ளனா எனக்கு உசுரு. அது தானுங்க வாழ்க்கை.



இத தானே நபியும் சொன்னாங்க!





- பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜெகாரா

நன்றி :- சமூக நீதி முரசு







Tuesday, February 1, 2011

மகவை முன்னாள் முஅத்தீன் அமானுல்லாஹ் அவர்கள் வஃபாத் - இரங்கல் அறிக்கை!

பேரன்புடையீர்!




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..........



மகாராஜபுரம்  முன்னாள் முஅத்தீன் அமானுல்லாஹ் அவர்கள்
02 -02 -2011 அன்று காலை  4.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமை வெற்றியடைய துஆ செய்யும் ...........

Saturday, January 29, 2011

மஹாராஜபுரம் கிராம சபை பொதுகூட்டத்தில் ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

அஸ்ஸலாமு அலைக்கும்...........

மஹாராஜபுரம் கிராம சபை பொதுகூட்டத்தில்



ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்



26.01.2011 குடியரசு தினத்தன்று மஹாராஜபுரத்தில் கிராம சபை பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவும், சில கோரிக்கைகளை முன் வைப்பதற்காகவும் ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் "ஜாகிர் உசேன்", "அபூதஹிர்", "அப்துல் காசிம்" ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு மஹாரஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் "திரு.கனகராஜ்" அவர்களை சந்திக்க சென்றது.





சந்திப்பின் நோக்கம் என்னவென்றால், 2 வாரங்களுக்கு முன்பு நமது முஸ்லிம் தெரு 6வது வார்டை இரண்டாக பிரித்து, இரண்டையும் மற்ற வார்டுகளுடன் தனித்தனியாக சேர்த்து விட்டார்கள் என்ற செய்தி நமக்கு கிட்டியது. இதனால் நம்முடைய முஸ்லிம் தெருவிற்கு தேர்தல் சமயத்தில் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்படகூடும். இதனடிப்படையிலே நாம் கிராம சபை கூட்டத்திற்கு சென்று, நம்முடைய கருத்தை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் எடுத்து வைத்தோம். அதற்கவர், "இல்லை உங்களுக்கு தவறான செய்தி வந்துள்ளது. நாங்கள் மக்கள் தொகையின் அடிப்படையிலும், 1 வார்டுக்கு 1 மெம்பெர் என்ற அடிப்படயிலும் வார்டுகளை தனித்தனயாக பிரித்துள்ளோம். அதனடிப்படையில் முஸ்லிம் தெருவை தனி வார்டாகத்தான் பிரித்துள்ளொம், அதனை இரண்டாக பிரித்து மற்ற வார்டுகளுடன் சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.



ஒருவழியாக வார்டு பிரச்சினையிலிருந்து தெளிவு பெற்றோம், இருந்தாலும் ஒரு சின்ன கவலை என்னவென்றால், ஒவ்வொரு வார்டுகளையும் 350 பேர் கொண்ட மக்கள்தொகையின் அடிப்படயில்தான் பிரித்துள்ளர்கள். ஆனால் நம் முஸ்லிம் தெருவின் மக்கள்தொகை 750யை தாண்டும். ஆகவே நாம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம், என்னவென்றால், ஒரு வார்டுக்கு 350 பேர் மக்கள்தொகை என்று வைத்துகொண்டால், எங்களுடைய முஸ்லிம் தெருவை 2 பெரும் வார்டுகளாக பிரிக்க என்ன தகுதி இல்லை என கேட்டோம். மேலும் முஸ்லிம் தெருவை 2 வார்டாக பிரிக்கும் பட்சத்தில், 2 முஸ்லிம் மெம்பெர்கள் கிடைப்பார்கள் என்ற நோக்குடனும் அவரிடம் கேட்டொம். அதற்கவர்,2001ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகளை பிரித்துள்ளோம். 2011ல் மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு மீண்டும் வார்டுகள் புதிதாக பிரிக்கப்படும் என்றார்.





இறுதியாக நாம் வைத்த கோரிக்கைகள்:

*புதிதாக எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம் தெருவை 2 பெரும் வாடுகளாக பிரித்து 2 முஸ்லிம் மெம்பெர்களை நியமிக்க வேண்டும்.

*பிஸ்மி கடையிலிருந்து ஜாகிர் கடை வரை உள்ள பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் புதிதாக வாருகால் அமைக்க வேன்டும்.

*பள்ளிவாசளில் இடப்பற்றாக்குறை காரணமாக புதிதாக கப்ருஸ்தான் அமைத்து தர வேண்டும்.






இந்த கோரிக்கைகளுடன் கிராம சபை பொதுக்கூட்டம் இனிதே நிறைவடந்தது,.,.






ஹிதாயத்துல் இளைஞர் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பாக கிராம சபை பொதுகூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி












கிராம சபை கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்