Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Saturday, January 29, 2011

மஹாராஜபுரம் கிராம சபை பொதுகூட்டத்தில் ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்

அஸ்ஸலாமு அலைக்கும்...........

மஹாராஜபுரம் கிராம சபை பொதுகூட்டத்தில்



ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்



26.01.2011 குடியரசு தினத்தன்று மஹாராஜபுரத்தில் கிராம சபை பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவும், சில கோரிக்கைகளை முன் வைப்பதற்காகவும் ஹிதாயதுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் "ஜாகிர் உசேன்", "அபூதஹிர்", "அப்துல் காசிம்" ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு மஹாரஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் "திரு.கனகராஜ்" அவர்களை சந்திக்க சென்றது.





சந்திப்பின் நோக்கம் என்னவென்றால், 2 வாரங்களுக்கு முன்பு நமது முஸ்லிம் தெரு 6வது வார்டை இரண்டாக பிரித்து, இரண்டையும் மற்ற வார்டுகளுடன் தனித்தனியாக சேர்த்து விட்டார்கள் என்ற செய்தி நமக்கு கிட்டியது. இதனால் நம்முடைய முஸ்லிம் தெருவிற்கு தேர்தல் சமயத்தில் மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்படகூடும். இதனடிப்படையிலே நாம் கிராம சபை கூட்டத்திற்கு சென்று, நம்முடைய கருத்தை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் எடுத்து வைத்தோம். அதற்கவர், "இல்லை உங்களுக்கு தவறான செய்தி வந்துள்ளது. நாங்கள் மக்கள் தொகையின் அடிப்படையிலும், 1 வார்டுக்கு 1 மெம்பெர் என்ற அடிப்படயிலும் வார்டுகளை தனித்தனயாக பிரித்துள்ளோம். அதனடிப்படையில் முஸ்லிம் தெருவை தனி வார்டாகத்தான் பிரித்துள்ளொம், அதனை இரண்டாக பிரித்து மற்ற வார்டுகளுடன் சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.



ஒருவழியாக வார்டு பிரச்சினையிலிருந்து தெளிவு பெற்றோம், இருந்தாலும் ஒரு சின்ன கவலை என்னவென்றால், ஒவ்வொரு வார்டுகளையும் 350 பேர் கொண்ட மக்கள்தொகையின் அடிப்படயில்தான் பிரித்துள்ளர்கள். ஆனால் நம் முஸ்லிம் தெருவின் மக்கள்தொகை 750யை தாண்டும். ஆகவே நாம் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம், என்னவென்றால், ஒரு வார்டுக்கு 350 பேர் மக்கள்தொகை என்று வைத்துகொண்டால், எங்களுடைய முஸ்லிம் தெருவை 2 பெரும் வார்டுகளாக பிரிக்க என்ன தகுதி இல்லை என கேட்டோம். மேலும் முஸ்லிம் தெருவை 2 வார்டாக பிரிக்கும் பட்சத்தில், 2 முஸ்லிம் மெம்பெர்கள் கிடைப்பார்கள் என்ற நோக்குடனும் அவரிடம் கேட்டொம். அதற்கவர்,2001ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகளை பிரித்துள்ளோம். 2011ல் மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு மீண்டும் வார்டுகள் புதிதாக பிரிக்கப்படும் என்றார்.





இறுதியாக நாம் வைத்த கோரிக்கைகள்:

*புதிதாக எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம் தெருவை 2 பெரும் வாடுகளாக பிரித்து 2 முஸ்லிம் மெம்பெர்களை நியமிக்க வேண்டும்.

*பிஸ்மி கடையிலிருந்து ஜாகிர் கடை வரை உள்ள பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் புதிதாக வாருகால் அமைக்க வேன்டும்.

*பள்ளிவாசளில் இடப்பற்றாக்குறை காரணமாக புதிதாக கப்ருஸ்தான் அமைத்து தர வேண்டும்.






இந்த கோரிக்கைகளுடன் கிராம சபை பொதுக்கூட்டம் இனிதே நிறைவடந்தது,.,.






ஹிதாயத்துல் இளைஞர் இஸ்லாம் நற்பணி மன்றம் சார்பாக கிராம சபை பொதுகூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி












கிராம சபை கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்




































Thursday, January 27, 2011

HPL - Cricket - Eid Ul Fitr

ஹிதாயதுல் இஸ்லாம் நற்பணி மன்றம் நடத்திய HIDHAYATH PREMIER LEAGUE (HPL) கிரிக்கெட் போட்டி கடந்த ரமளானில் (2010)நடைபெற்றது .......அல்ஹம்துலில்லாஹ்  ........


அதில் சில அற்புதமான காட்சிகள்...........





இதே போல் பல கோப்பைகள் வாங்க வாழ்த்துக்கள் .......


Sunday, January 23, 2011

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!




தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .

இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை



தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது



பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்

* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி



சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல் நகல் (xerox)

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26



கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்

* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
 
 ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)




தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது



பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி



சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது



சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26



கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்

* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
 
 
தொழிற்படிப்புகள் ( Engineering )






தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது



பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )

* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி



சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது



சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26



கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்



மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

Saturday, January 15, 2011

கமலாதாஸ் – ஸுரையா

கமலாதாஸ் – ஸுரையா




கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் அவர்.



கேரளாவில் எர்ணாகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்த போது அவர் திடீரென அந்த அறிவிப்பை வெளியிட்டார். அவரது உரைநடை மற்றும் கவிதை நடைக்கு மக்களிடத்தில் சிறந்த வரவேற்பிருந்ததால் அவரது இந்த திடீர் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திற்று.






அவர் தமது அறிக்கையில், ‘நான் இந்துக்களைப் போல என்னை – எனது பிணத்தை எரிக்க விரும்பவில்லை. இதுவே நான் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரதான காரணம். நானோ ஒரு கைம்பெண். எனது குழந்தைகளும் என்னோடு இல்லை. எனவே இந்த மார்க்கத்தில் நான் என்னை இணைத்து நான் எல்லோராலும் நேசிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். இதோ இந்த ரமளான் மாதம் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிறந்த மாதம்.



எனவே தான் இப்போதே நான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். என்னிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல புதிய தகவல்கள் உள்ளன. அது பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்குகிறது. நானோ ஆதரவற்றவள். சொந்த – பந்தமில்லாத எனக்குப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது.



இந்துச் சமய மக்கள் விக்கிரகங்களைக் கடவுள்களாகக் கருதி வழிபாடு செய்கின்றனர். அவை பக்தர்களைத் தண்டிக்கும் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ்வோ பாவங்களை மன்னிப்பவன். எனவே மன்னிக்கின்ற இறைவன் தான் எனக்கு வேண்டும் – என்று குறிப்பிட்ட எழுத்தாளர் கமலாதாஸ், இந்த முடிவைப் பற்றி நீண்ட காலமாக தாம் சிந்தித்து வந்ததாகவும் கூறுகிறார்.



மேலும் அவர் கூறுவதாவது:



இந்து மதக் கோட்பாட்டின்படி நான் இறந்து போன பின்பு அடுத்த தலைமுறையில் காகமாகவோ மற்ற விலங்காகவோ பிறப்பேன் என்றெல்லாம் எனது சந்ததிகள் கருதுவதை நான் விரும்பவில்லை. மேலும் இந்த ரமளான் மாதம்தான் நான் இஸ்லாத்தை தழுவியதைப் பிரகடனப்படுத்த வேண்டிய பொருத்தமான மாதமாகும். எனவே நான் இஸ்லாத்தை தழுவியதற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருங்கள்! நான் நீண்ட காலமாக எந்த மதத்திலும் பிடிப்பில்லாமல் இருந்தேன். நான் எது வரை இவ்வாறு இலட்சியமற்றவளாக இருக்க முடியும்?



டாக்டர் கமலாதாஸ், மாதவிக்குட்டி என்ற புனைப்பெயரில் தொடர்ந்து மலையாளத்தில் எழுத விரும்புகிறார். ஆங்கிலத்தில் எழுதும் போது தமது புதிய பெயரான ‘ஸுரையா’வை பயன்படுத்துகிறார்.



இவரது பெற்றோர்கள் பிரபலமானவர்கள். தந்தை எஃப்.எம்.நாயர் மலையாள தினசரியான மாதருபூமி பத்திரிக்கையில் முன்னாள் ஆசிரியராவார். தாயார் நாலபாட்டு பாலாமணி அம்மா மலையாள மொழியில் எழுத்தாளராகவும் கவிஞராகவும் பிரபலமானவர்.



உங்களைப் பற்றி மக்கள் விமர்சித்தால் உன்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு ஸுரையா பதில் கூறும் போது, ‘இது என்னுடைய சுயவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்ட முடிவாகும். இதில் யாருடைய தலையீட்டையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை. நான் எனது அறையிலிருந்த அனைத்து விக்ரகங்களையும் எடுத்து இந்துக்களிடம் கொடுத்து விட்டேன். அவர்களிடமிருந்து நான் பெற்றது வேதனைகள் மற்றும் கேவலமான விமர்சனங்களையும் தான்.



ஆனால் இப்போதோ நான் புதிதாக பிறந்தவளாக இருக்கின்றேன். குர்ஆனின் சில பாகங்களை நான் மனனம் செய்துள்ளேன். அவற்றை எனது கவிதைகளில் வடித்துள்ளேன். சில இஸ்லாமிய சிந்தனையாளர்களின் உதவியுடன் இஸ்லாத்தைப் பற்றிய விவரங்களை அறிந்தும் வருகின்றேன்’ என்று குறிப்பிடுகிறார்.



அவருடைய பூர்வீக ஊரான நாலபாட்டைப் பற்றி அதன் தோற்றம் வித்தியாசமாக மனதில் தோன்றுவதாக ஓர் எழுத்தாளர் கூறிய போது, ‘அங்கு எனது வீட்டுக்கருகில் ஒரு பள்ளிவாசலை நான் உருவாக்குவேன். அப்போது அங்கிருந்து வரும் முஅத்தினின் பாங்கோசையை நீர் கேட்பீர், அப்போது அந்த ஊரைப்பற்றி உமது உள்ளத்தில் உதித்த தோற்றம் மாறும்’ எனக் கூறினார் ஸுரையா.



இன்று டாக்டர் ஸுரையா, இஸ்லாமிய அழைப்பு சம்பந்தமான பிரசுரங்களிலும் பிரச்சாரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். இஸ்லாத்தின் தனித்துவங்களையும் பெருமைகளையும் விவரிக்கிறார்.



குறிப்பாக இஸ்லாம் பெண்ணினத்திற்கு வழங்கியிருக்கும் உரிமைகள், பாதுகாப்புகள் கண்ணியங்கள் ஆகியவற்றைப் பெண்களுக்கு எடுத்துக் கூறி பெண்களை இஸ்லாத்தில் இணையச் செய்து புரட்சி செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் கமலா ஸுரையா.



(குறிப்பு: டாக்டர் கமலா ஸுரையா அவர்கள் மே 31, 2009 ஞாயிற்றுக் கிழமை சுவாசக் கோளாறு காரணமாக வஃபாத்தானார். அவரின் மறுமை வாழ்வு சிறக்க துஆச் செய்வோமாக!)