Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Sunday, February 6, 2011

மூணு நாளா இடுப்பை ஒடிச்சுப்புட்டாங்க…!

பெருநாள் அன்னிக்கு கூட எங்களுக்கு நிம்மதி இல்லாமப் போச்சு. இந்தப் புள்ளைங்கள பெத்ததுக்கு சும்மா இருந்திருக்கலாம். தெனமும் எழும்புனா புள்ளைங்கள வேலைக்கு அனுப்புறது, துணி தொவைக்கிறது, அப்புறம் மத்தியான சாப்பாடு, நைட்டு சாப்பாடுன்னு எப்ப பார்த்தாலும் மிசின் மாதிரி அதையே திருப்பி திருப்பி செஞ்சுக்கிட்டு கிடக்கிறோம். ஏன்டா பொம்பளயா பொறந்தம்னு வெறுத்துப் போச்சு. ஒரு நாளு படுத்துகிட்டா கூட ஊடு நாறிப் போவுது.




முன்னாலெல்லாம் துணிமணிங்க கொஞ்சமாத்தான் இருக்கும். இந்தக் காலத்துல 5 பேருக்கே தெனமும் 10-15 துணி சேருது. கை காலெல்லாம் வலிக்குது.



நான் இந்த கடிதத்த ஒங்களுக்கு ஏன் எழுதினேன்னா இந்த வருசம் ஹஜ் பெருநாள்ல எங்க ஊட்ல நடந்த கொடுமையை எல்லாத்துக்கும் சொல்லனும்னுதான் எழுதுறேன். நான் எழுதினத ஒங்க பத்திரிகையிலே அப்படியே போடுங்க!



எங்க வீட்டுல என்னுடைய மூத்த பையன் தவ்ஹீது ஜமாஅத்துல இருக்கான். இரண்டாவது பையனுக்கு PJ அண்ணன பிடிக்காது. அதனால “ஜாக்” அமைப்பில இருக்கான். எங்க வீட்டுக்காரரு ஜமாஅத்து நிர்வாகத்துக்கு பயந்துகிட்டு அவங்க சொல்லுறதுக்கு தலைய ஆட்டுவாரு. அப்படின்னா ஒரு நிமிசம் என் நிலமைய கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க!



இந்த ஹஜ்ஜுப் பெருநாள் வந்துச்சு பாருங்க. மூணு நாளா நான் படாதபாடு பட்டுட்டேன்.



என் கஷ்டத்தை நான் யாருகிட்ட போய் பொலம்புறதுன்னு தெரியல.



மொத நாலு செவ்வாக்கிழமை என்னோட ரெண்டாவது பையன் “ம்மா இன்னிக்கு தான் பெருநாள். வா தொழுகப் போவோம்னு” கூப்புட்டான். சரி, அவன் மனசு நோக கூடாதுன்னு போய் தொழுதுட்டு வந்து கறி வாங்கி ஆக்கி கொடுத்தேன். ரெண்டாவது நாளு புதன்கிழமை ஊரே பெருநாள் கொண்டாடினிச்சு. நானும் என் வீட்டுக்காரரும் எங்க வீட்டுல இன்னொரு ஆள் இருக்கு. ஒங்க கல்வி நிகழ்ச்சிய பார்த்து காலேஜ்ல சேர்த்துவுட்டு இப்ப காசு காசுன்னு என் உசுர வாங்கறா! என் பொம்பள புள்ளைதான். நாங்க மூணு பேருமா சேர்ந்து போய் தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி வாங்கி பிரியாணி வச்சு சமைச்சு முடிக்க 4 மணியாச்சு. நான் ஒருத்தி மட்டும் கெடந்து அவ்வளவு வேலையும் பார்த்து முடிக்க அம்புட்டு நேரமாச்சு.



நான் வேலையில்லாம பெத்தேனே ஒரு பொம்புள புள்ளைய… தெண்டம்! ஒரு வேல பார்க்க மாட்டேங்கிறா. எந்த நேரமும் டி.வி.தான் பார்க்கிறா. என்னத்த சொல்றது.



மூனாவது நாளு காலயில மூத்த பையன் வந்து இன்னிக்குதாம்மா பெருநாளுன்னு சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல. அப்ப நேத்து நாங்க தொழுவுனது என்னான்னு கேட்டேன். அது டூப்பிளிகேட்டுன்னு சொன்னான். எனக்கு கோவம் வந்துச்சு. ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டேன். நீ தொழுவ வர்ரீயா இல்லியான்னு கத்த ஆரம்பிச்சுட்டான். அவங்க கூப்புட்டவுடன் போய் தொழுவுன மாதிரி எங்கூடயும் வான்னு கையபுடிச்சு இழுத்தான். சரின்னு அவங்கூடயும் போய் மூணாவது நாளா தவ்ஹீத் ஜமாஅத் நடத்துன தொழுகையை தொழுதுட்டு வந்து அன்னிக்கும் கறி எடுத்து ஆக்கி கொடுத்து மூனு நாளா என் இடுப்பு எலும்பு முறிஞ்சு போச்சுங்க. இனி என்னால தாங்க முடியாது.



என்ன பெத்த ராசா மாருவளா…! நீங்க சமுதாயத்துக்கு தொண்டு செய்யறது எனக்கு நல்லா தெரியுது. அத ஒன்னும் நான் குத்தஞ்சொல்லல. ஆனா என்னைய மாதிரி பொம்பளைங்கள கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க! எங்க பயலுகளுக்கு நீங்க என்னாத்த சொல்லிக் கொடுக்கறீங்களோ… எங்க உசிரு போவுது.



சொர்க்கத்துக்கு வழிகாட்டுறோம்னு சொல்லி எல்லாருமா சேர்ந்து எங்களுக்கு இங்கயே நரக வேதனைய அனுபவிக்க வெச்சுட்டீங்களே! இது ஒங்களுக்கு நாயமா படுதா?



எல்லா மக்களும் ஒரே நாள்ல பெருநாள் கொண்டாடினாக்கா நாங்க பொம்பளைங்க சேர்ந்து, நீங்க, ஜமாஅத்காரங்க, தலைவருங்க, அமைப்பை நடத்துறவுங்க எல்லாரும் சொர்க்கத்துக்கு போவனும்னு துவா செய்வம்ல. இன்னொரு முக்கியமான விசயமுங்க.



எங்க வீட்டுல தொல்லை தாங்க முடியலங்க. வாப்பாவும் மகனுங்களும் அடிச்சுக்கிறாங்க. வாப்பா ஒன்னு சொன்னா அதுக்கு மார்க்கத்துல ஆதாரம் எங்கன்னு என் பசங்க கேக்கறானுங்க. என் வீட்டுக்காரரு அந்த காலத்து மனுசன். ஏதோ அவருக்கு ஹஜரத்மாரு சொன்ன மார்க்கம்தான் தெரியும். அறுபது வயசாகற அவருகிட்ட போய் ஆதாரம் குடுன்னு கேட்டா அத எந்த கடையில வாங்குறதுன்னு கேக்குறாரு. அவருக்கு கோவம்தான் வருது. வீட்டுல எப்ப பார்த்தாலும் ஒரே பெரச்சனைதான்.



ஒங்க அமைப்புல பயான் செய்யும்போது எல்லாரும் ஒத்துமையா, பொறுமையா இருங்கன்னு சொல்லிக் கொடுங்க. பெரியவங்களயும் பெத்தவங்களயும் மதிக்கனும்னு சொல்லிக் கொடுங்க.



இததானே நபியும் சொல்லித் தந்தாங்க.



வேதனையுடன்

பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜொகரா

வண்ணாரப்பேட்டை.

சென்னை.



Wednesday, February 2, 2011

ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்...............





ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்.................




அல்லஹ்வுடைய கிருபையால் 16.01.2001 ஞாயிற்று அன்று ஹிதாயத்துல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக "ஒருநாள் தர்பியா ப்ரோகிராம்" பள்ளிவாசல் தோப்பில்  வைத்து இனிதே நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!!!



சகோ . "ஷாஜஹான்" மற்றும் சகோ."அப்துஷ்ஷுக்கூர்" ஆகியோரின் ஆலோசனைப்படி, பள்ளிவாசல் தோப்பில்  வைத்து இளைஞர்களுக்கென்று தனியாக ஒருநாள் தர்பியா ப்ரொகிராம் நடத்த வேண்டும் என முடிவெடுக்கபட்டது. அதனடிப்படையில் 16.01.2011 ஞாயிறு அன்று மதிய உணவோடு தர்பியா ப்ரொகிராம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மௌலானா மௌலவி ஜாபர் அலி  மிஸ்பாஹி

அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும் தம்பிபட்டி
ஜும்மா பள்ளிவாசல் இமாம்  முஹமது ஜமீல் பைஜி  மற்றும் மகாராஜபுரம் பள்ளிவாசல் ஹஜ்ரத் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

முதல் அமர்விலே கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம்.முதல் அமர்வில் பல அருமையான கேள்விகள் இளைஞர்கள் கேட்டார்கள். அதற்கு அருமையான விளக்கங்களை மௌலானா மௌலவி  ஜாபர் அலி மிஸ்பாஹி அவர்கள் அளித்தார்கள் . கேள்வி-பதில் நிகழ்ச்சியோடு முத்ல் அமர்வு இனிதே முடிவடைந்தது.பின்பு லுஹர் தொழுகை நடைபெற்றது.






மதிய உணவுக்கு பின் இரண்டாம் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் "இஸ்லாத்தில் இளைஞர்கள் பங்கு" என்ற தலைப்பில் மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி அவர்கள் அருமையாக  உரையாற்றினார்கள்.



சமையல் பொறுப்பை "முஜிபுர் ரஹ்மான்"(நமதூரில் புதிதாக ஹோட்டல் கடை ஆரம்பித்துள்ளார்) ஏற்றுக்கொண்டார்.அல்லாஹ் அவருக்கு அபிவிருத்தியை வழங்குவானாக!

ப்ரோக்ராமில் சில அற்புதமான காட்சிகள்.........












பாவிப் பயலுக…!

பாவிப் பயலுக…!


அஸ்ஸலாமு அலைக்கும்


போன தடவ என் கடிதத்தை ஒங்க பத்திரிக்கையில அப்படியே போட்டுட்டிங்களாமே! எங்க பயலுக வந்து கத்திகிட்டு கெடந்தானுக. இனி என் மனசுல வர்ரது எல்லாத்தையும் எழுதரேன். நல்லார்ந்தா போடுங்க.



முந்தா நாளு என் ஊட்டுக்கு எங்க சொந்தக்காரங்க கும்பலா வந்தாங்க. அவங்க பொண்ணுக்கு கலியாணம் மூச்சி மூனு மாசமாகல, அதுக்குள்ள அந்த பாவிப்பய தலாக் உட்டுட்டானாம்! நம்ம சமுதாயத்துல இப்ப இதுமாதிரி நெறைய நடக்குதுங்க.



நல்லா படிச்ச பயலுகதேன்… இப்படி பன்றானுக. என்னாத்த படிச்சானுகளோ தெரியல. எத படிக்கனுமோ அதபடிக்காம வேற எல்லாத்தையும் படிக்கிறானுக. பொசுக்கு பொசுக்குனு தலாக் உடுறானுக. பொண்டாடிக்கு சோறு ஆக்க தெரியலனா தலாக்! சோத்துல உப்பு இல்லனா தலாக்! இப்படி உப்பு சப்பு இல்லாததுக்கு எல்லாம் தலாக் உடுறானுக.



ஏம்மா ஒன்ன தலாக் உட்டான்னு… கேட்டேன். அந்த பயலோட அம்மா முன்னால இந்த பொண்ணு கால்மேல கால்போட்டு ஒக்கார்ந்து இருந்ததாம். அதனால அவ புருசன் தலாக் உட்டுட்டானாம்! ஒன்னோட கால்மேல தானே ஒன்னோட காலபோட்டேன்னு கேட்டேன், அந்த புள்ள சிரிக்குது.



இதுக்கெல்லாம் தலாக் உட்ட அந்த பயல எதால அடிக்குறதுன்னே தெரியல. புதுசா கெடச்ச பூவ இப்படி கசக்கி எடுத்துட்டு தலாக் உட்டுட்டானே உருப்படுவானா அவன்?



அந்த பொண்ணுக்கு நடந்த மாதிரி தான் இப்போ எல்லா எடத்திலேயும் அதிகமா நடக்குது. இத யாராலையும் தடுக்க முடியல. கலியாணத்துல லட்சம் லட்சமா வெக்கமில்லாம காசு வாங்குரானுக… நாங்க வயிறு எரிஞ்சு நாசமா போகனும்னு சொல்லித்தேன் தர்ரோம். அப்ப கூட எங்க பொண்ணுகள வெச்சு ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டேனுங்காரனுக. சில ஊர்கள்ல ஹஜரத்துமார்களும் கைக்கூலி வாங்குறாங்க. இந்த அநியாயத்தை எந்த ஜமாத்காரங்களும் ஹஜரத் மார்களும் கேக்கமாட்டேங்கராங்க.



கலியாணம் பண்ணி 6 மாசம் 1 வருசதுல எல்லாம் தலாக் உடுறானுக பாவிப்பயலுக. ஷரிஅத் கோர்ட்டுன்னு மவுண்ட் ரோடு, மக்கா பள்ளியில நடத்துராங்க/ அவங்க எவ்வளவு சொன்

னாலும் இந்த பயலுகளும் அவனுகள பெத்தவங்களும் யாருக்கும் கட்டுப்பட மாட்டேங்கராங்க… இவனுகள யாராலையும் கட்டுப்படுத்த முடியல.



இந்தப் பொண்ணுகளும் சும்மா இருக்க மாட்டாளுக. இப்ப மொளச்சு வர்ரது எல்லாம் பிஞ்சியிலேயே பளுத்ததுக. படிச்சுப் புட்டோம்ங்கர திமிரு ஜாஸ்தி. மாப்புள்ள கிட்ட எதுக்கு எடுத்தாலும் சண்டைக்கு நிக்கிராளுக. மாமியாகாரிய மதிக்கிறதே இல்ல.



கலியாணம் மூச்ச உடனே ‘வா தனிக்குடித்தனம் போவோம்’னு மாப்பிள்ளகிட்ட தலையாண மந்திரம் ஓதுறதுன்னு அநியாயம் பன்றாளுக. இப்படி பன்னினாக்க எங்கேந்து சேர்ந்து வாழரது? குடும்பம் எப்படி உருப்படும்.



அல்லா தான் காப்பாத்தணும்.



காசு பணம் சம்பாதிக்கிறது எப்படின்னுதேன் இப்ப உள்ள பயலுக தெரிஞ்சு வெச்சிருக்கானுக. பொண்டாட்டி, புள்ள, குடும்பம், ஒறவுக்காரங்க இதைப் பாக்குறதுக்கு அவனுகளுக்கு எங்க நேரம்?



கலியாணம்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுறோம். ஆனா இந்த காலத்துல ஆறு மாசங்கூட சேர்ந்து ஓட மாட்டேங்குது.



எனக்கு கலியாணம் மூச்சி 45 வருமாச்சு. தெனமும் எனக்கும் என் ஊட்டுக்காரருக்கும் சண்டை வரத்தேன் செய்யும். ஆனா ஒரு நாளு கூட அவரு இல்லாம நான் சாப்பிட்டதில்லை. அடிச்சாலும் புடிச்சாலும் என் மாப்புள்ளனா எனக்கு உசுரு. அது தானுங்க வாழ்க்கை.



இத தானே நபியும் சொன்னாங்க!





- பாப்பம்பட்டி பாத்திமுத்து ஜெகாரா

நன்றி :- சமூக நீதி முரசு







Tuesday, February 1, 2011

மகவை முன்னாள் முஅத்தீன் அமானுல்லாஹ் அவர்கள் வஃபாத் - இரங்கல் அறிக்கை!

பேரன்புடையீர்!




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..........



மகாராஜபுரம்  முன்னாள் முஅத்தீன் அமானுல்லாஹ் அவர்கள்
02 -02 -2011 அன்று காலை  4.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மறுமை வெற்றியடைய துஆ செய்யும் ...........