Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Sunday, December 26, 2010

கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாம்............

கேட் ஸ்டீபன்ஸ் – யூசுப் இஸ்லாம்


பிரபல பாப் இசைப் பாடகரான முன்னாள் கேட் ஸ்டீபன்ஸ், தாம் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை இதோ விவரிக்கிறார்:



நான் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றை நீங்கள் அனைவரும் அறிந்துள்ள செய்தியின் மூலம் துவக்குகின்றேன். அது யாதெனில்.. எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் நம்மை வழித்தோன்றல்களாக ஆக்கி நமக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். குறிப்பாக நமக்கு சீரான பாதையைக் காண்பிப்பதற்காக இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களைத் தெரிவு செய்துள்ளான். எனவே இதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பதை மனிதன் கருத்தில் கொள்ள வேண்டும். இனி வரவிருக்கும் நிரந்தர வாழ்க்கைக்காக தம்மைத் தயார்படுத்துவதற்கு முயற்சி செய்யவும் வேண்டும். ஏனென்றால் இன்றைய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவன் அதை மீண்டும் பெறவே இயலாது. அல்லாஹ் கூறுகிறான்:



இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், ‘எங்கள் இறiவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டுக் கொண்டோம். ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்’ என்று சொல்லும் போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).



மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் ‘நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்’ என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததன் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் எங்களை மறந்து விட்டோம். மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்!’ (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்). 32:12-14



இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் ‘எங்கள் இறiவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும், ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்வோம்’ என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) ‘சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார். ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்! ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை’ (என்று கூறுவான்). 35:37



சிறு பிராயம்:



தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் கிறிஸ்துவ குடும்பம். குழந்தை பொதுவாக இயல்பான நிலையில்தான் பிறக்கிறது. அதன் குடும்பத்தினர் தாம் அதை நெருப்பு வணங்கியாகவோ யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ மாற்றுகின்றனர் என நாம் அறிந்திருப்பதைப் போல, எனது தந்தை கிறிஸ்துவர் என்பதால் அவரது பராமரிப்பில் வளர்ந்த நானும் அந்த வழியிலேயே மாறிவிட்டிருந்தேன். அப்போது இறைவன் இருப்பதாகவும் அவனை நாம் ஈஸா (அலை) மூலமாகத்தான் அணுக இயலுமே அல்லாது நேரடியாக தொடர்பு கொள்ளவியலாது. அவர்தாம் கடவுளை அடைவதற்கான வாயில் என்பதாகவும் அறிந்து வைத்திருந்தேன். இந்தக் கருத்தை ஓரளவுக்கு நான் ஏற்றிருந்தாலும் எனது அறிவு முழுமையாக இதை ஏற்றிருக்கவில்லை.



ஈஸா (அலை) அவர்களின் சிலையை நான் உற்று நோக்கினேன். அது ஒரு கல், வாழ்க்கையைப் பற்றி எதுவும் அறியாது. அது போல திரித்துவ கொள்கையும் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும் இந்தக் கோட்பாடுகள் எனது தந்தையின் மதம் சார்ந்தவையாக இருந்ததால் அவரது மரியாதையைக் கருதி அவற்றைப் பற்றிய தர்க்கத்தில் என்னை நான் ஈடுபடுத்தவில்லை.



பிரபல பாப் இசைப்பாடகராக…



நான் கொஞ்சங் கொஞ்சமாக மதக்கோட்பாட்டிலிருந்து தூரமாகி இசை மற்றும் பாடல் துறைக்குத் தாவினேன். ஒரு பிரபல பாடகனாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. அந்த வேகமான வாழ்க்கையின் அலங்காரங்களும் ரசனைகளும் என்னை ஈர்த்துக் கொண்டன. அதனால் இசையே எனது கடவுளானது. பொதுவாக பணமே எனது குறிக்கோள் என்றானது. ஏனெனில் எனது மாமா ஒருவர் அதிகமான பொருளாதாரத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரைப் போலவே நானும் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் எனக்கு இந்தச் சிந்தனையை ஊட்டுவதில் என்னைச் சுற்றியிருந்த சமூக அமைப்புகளுக்கும் அதிகப்பங்கு இருந்தது. காரணம் உலகமே சதம் என்றும் அதுவே எல்லாம், அதுவே கடவுள் என்றும் சமூகம் கருதியிருந்தது.



எனவேதான் காசு மட்டுமே குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை நான் உறுதியாக தெரிவு செய்தேன். இந்த உலகம் என்னுடைய ஆசைகளை அடைந்து கொள்ள வேண்டிய களம், என்னைப் பொருத்த வரை இத்தோடு நமது ஆட்டங்கள் முடிந்துவிடும் என்றெல்லாம் நான் கருதியிருந்தேன். இத்துறையில் உலக அளவில் பேசப்படும் பாப் இசை வித்துவான்களே எனக்கு முன்மாதிரிகளாகத் தோன்றினர்.



இவ்வாறாக நான் இவ்வுலக வாழ்க்கையில் எனது சக்தியைப் பிரயோகித்து முழுமையாகவே மூழ்கியிருந்தேன். அதிகமான பாடல்களை நான் வழங்கியுள்ளேன். ஆயினும் தேடப்பட்ட பொருளாதாரத்தை நான் ஆராயும் போது எனது அடி மனதில் மனிதாபிமான ஆசையும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும் உறுத்திக் கொண்டிருந்தன. ஆனாலும் குர்ஆன் கூறுவதைப் போல மனித மனம் வாக்களிப்பதை நிறைவேற்றுவதில்லை. மாறாக அதிகமான பொருளாதாரம் வரும்போதெல்லாம் கூடவே ஆசைகளும் அதிகரித்தே விடுகின்றன.



இவ்வாறாக பத்தொன்பது வயதை நான் கடக்காத கட்டத்திலேயே மாபெரும் வெற்றியை அடைந்தேன். எனது புகைப்படங்களும் என்னைப் பற்றிய செய்திகளும் தகவல் தொடர்புச் சாதனங்களுக்கு வெகுவாகவே தீனி போட்டன. இந்தப் பகட்டான முன்னேற்றம் கால எல்லைகளைக் கடந்து ஆடம்பர வாழக்கைக்கு என்னை இட்டுச் சென்றது. அதன் காரணமாக மதுவிலும் போதையிலும் நான் மூழ்கிப் போயிருந்தேன்.



மருத்துவமனையில் நுழைதல்:



வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார வெற்றியும் பிரபலமும் நான் அடைந்து ஏறத்தாழ ஓராண்டு கழிந்திருக்கும் அப்போது என்னைக் காசநோய் பீடித்தது. சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டேன்.



நான் அங்கிருந்த போது எனது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கலானேன். நான் என்ன வெறும் ஜடம் தானா? நான் என்ன செய்தால் இந்த ஜடத்தைச் சிறப்பாக அமைக்கலாம்? என்றெல்லாம் பல வினாக்கள் என்னுள் எழுந்தன. உண்மையில் எனது நிலையைப் பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்த அந்தக் கட்டம் எனக்கு இறையருளாகவே அமைந்தது. அது எனது கண்களை நான் திறப்பதற்கும் சீரான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கும் இறைவன் வழங்கிய ஒரு சந்தர்ப்பம் என்றே நான் நினைக்கின்றேன்.



நான் ஏன் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் உருவாயின. இவற்றிற்கான விடைகளை நான் தேட ஆரம்பித்தேன். நான் ஏற்றுக் கொண்டிருந்த கோட்பாடுகள் கிழக்காசிய நாடுகளில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. எனவே அந்தக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்கலானேன்.





முதலில் மரணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. அப்போது தான் ஆன்மாக்கள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு மாறுகின்றது. இந்த உலக வாழ்க்கையோடு அவற்றின் சகாப்தம் முடிவடைவதில்லை என்பதை அறிந்தேன். அன்றே நான் சீரான பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி விட்டதை அறிந்தேன்.



இவ்வாறாக ஆன்மீக சிந்தனை பற்றிய அக்கறை என்னைத் தொற்றிக் கொள்ள படிப்படியாக இதய அமைதி எனக்குள் அதிகரித்தது. அதன் விளைவாக நான் வெறும் வெற்றுடம்பு அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.



ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது மழை பெய்தது. உடனே நான் மழையில் நனையாமல் இருப்பதற்காக சற்று ஓடினேன். அப்போது ஒரு தத்துவம் எனது நினைவிற்கு வந்தது. அது யாதெனில், ‘உடம்பு என்பது ஒரு கழுதையைப் போன்றது, அதைப் பழக்கப்படுத்தினால் தான் அதை அதன் எஜமானன் தனது விருப்பத்திற்கிணங்க பயன்படுத்த இயலும். இல்லையெனில் கழுதை தனது விருப்பத்திற்கிணங்க எஜமானனைப் பயன்படுத்திக் கொள்ளும்.’



அப்படியாயின் சுயமான விருப்பும் வெறுப்புமுள்ள மனிதனாகிய நான் வெறும் ஜடமல்லவே. கிழக்கத்திய கோட்பாடுகளை ஆராயும்போதும் இந்த முடிவே எனக்குத் தென்பட்டது. ஆயினும் கிறிஸ்தவம் எனக்கு முழுமையாகவே பிடிக்காமல் போயிற்று.



நான் குணமடைந்ததும் மீண்டும் இசைத்துறைக்குத் திரும்பினேன். அது எனது புதிய சிந்தனைகளை மழுங்கடிப்பதைப் போல் தோன்றியது. அது பற்றி நான் பாடிய பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:



சுவனத்தையும் நகரத்தையும் படைத்த (இறை)வனை அறிய வேண்டுமே! இந்த உண்மையை நான் படுக்கையில் கிடந்து அறிய இயலுமா, இல்லை, ஒண்டுக் குடிசையில் ஒதுங்கித்தான் புரிய இயலுமா? மற்றவர்களோ ஆடம்பரமான உணவகங்களின் அறைகளில் உழன்று கிடக்கின்றனர். (கவிதையின் கருத்து)



இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் இன்னொரு பாடலையும் நான் பாடினேன். அது கடவுளை அறிவதற்கான வழியைப் பற்றியது.



இந்நிலையில் இசைவுலகில் எனது பிரபலம் அதிகரித்தது. அப்போது நான் மிகவும் சிரமத்திற்குள்ளாயிருந்தேன். காரணம், எனது பாடல்கள் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருக்கும் வேளையில் நானோ உண்மையைத் தேடும் வேட்கையில் மூழ்கியிருந்தேன். அந்த வேளையில் புத்த மதம் சிறந்ததும் உயர்ந்ததுமாக இருக்கும் என்று நம்பியிருந்தேன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ளவோ இசையுலகத்தைக் கைவிடவோ வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவோ எனக்குத் தோன்றவில்லை. நானோ உலக வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தேன்.



பிறகு எனது சத்திய வேட்கை, கிரகங்கள் மற்றும் எண்கணித ஆய்வுகளின் வாயிலாக தொடர்ந்தது. அவைகளிலும் எனக்குச் சரியான நம்பிக்கை வரவில்லை. அப்போது இஸ்லாத்தைப் பற்றியும் நான் வெகுவாக அறிந்திருக்கவில்லை.



ஒரு நாள் நான் ஆச்சர்ய மிக்க வகையில் இஸ்லாத்தைப் பற்றி அறிய முடிந்தது. அதாவது எனது சகோதரர் பைத்துல் முகத்தஸ் சென்று விட்டுத் திரும்பினார். அப்போது அவருடைய நடையுடை பாவனைகள் சற்றே வித்தியாசமாக இருந்தன


                                                                                                   இன்ஷா அல்லாஹ் வளரும் .......

Tuesday, December 21, 2010

மவ்லானா கலீல் அஹ்மது கீரனூரி ஹழ்ரத் வஃபாத் - இரங்கல் அறிக்கை!

பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தப்லீக் அமைப்பின் அமீருமான மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அ. கலீல் அஹ்மது மன்பயீ கீரனூரி ஹழ்ரத் அவர்கள், முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு வைத்த நிலையில் வியாழன் (16.12.2010) மாலை 5.30 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஹழ்ரத் அவர்களுக்கு வயது 68. ஒரு மனைவியும், 3 ஆண் மக்களும், இரு பெண் மக்களும் உள்ளனர்.
அன்னாரின் ஜனாஸா வெள்ளிக்கிழமை (17.12.2010) பகல் 11.30 மணிக்கு கீரனூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹழ்ரத் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், சமுதாயப் பிரமுகர்களும், ஜமாஅத்தினரும் கலந்து கொண்டனர்.





சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான தமிழகத்து அமீருல் வாயிழீன் (சொற்பொழிவாளர்களின் தலைவர்) மௌலானா கலீல் அஹமது கீரனூரி ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.


அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக அமைத்து 1996 முதல் 'ஹைஅத்துஷ் ஷரீய்யா' என்ற ஷரீஅத் பேரவையை நடத்தி வந்தார்.


தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள்.


சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று 1960களில் கல்லூரிகளில் பேராசிரியர் பொறுப்பேற்றுப் பணியாற்றியுள்ளார்கள். ஈரோடு தாவூதிய்யா அரபி கல்லூரியிலும், திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியிலும் பிரபல்யமான ஆசானாகத் திகழ்ந்தார்கள். பின்னர் திண்டுக்கல் யூஸூஃபிய்யா அரபி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று இன்று வரை தொடர்ந்து பணிபுரிந்து வந்தார்கள்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் கீரனூரி ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தப்லீக் ஊழியர்களுடன் இணைந்து தப்லீக் ஜமாஅத்தின் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். தப்லீக் இயக்கம் தமிழகத்தில் 1952-ல் பரவத் தொடங்கியது. மாலிக் மௌலானா அவர்களின் பெருந்தொண்டும், ஆன்மீக வழிகாட்டுதலும் பல்லாயிரம் பேரை தப்லீக் இயக்கத்தின்பால் ஈர்த்தது.

ஆரம்ப காலத்தில் ரஹ்மதுல்லாஹ் மௌலானா, உமர் பாலன்பூரி மௌலானா இருவரும் குட்டிக் கதைகள் கூறி, இஸ்லாமிய தத்துவங்களை பாமரரும் புரியும் வண்ணம் பேசுவதில் நிகரற்றவர்கள். அவர்களின் பாணியில் தமிழில் உரையாற்றும் பேராற்றல் கீரனூரி ஹழ்ரத் அவர்களுக்கு இருந்தது. அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளை உதாரணமாக்கிப் பேசி, எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அரிய குணம் அவர்களுக்கு இருந்தது.




உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.



அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக் வருகிறது.


(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலிருந்து மேற்கண்ட தகவல்கள் பெறப்பட்டன).



தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.




யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.



ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.



-----------------------------------



ஹழ்ரத் அவர்கள் குறித்து அதிரை சகோதரர் இப்னு அலிய் தரும் குறிப்பு:



ஹழ்ரத் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். 10 - 15 நிமிடங்கள் தமிழில் தாம் பேசியதை அப்படியே உருதுவில் மொழியாக்கிப் பேசிவிட்டுத் தொடர்ந்து 10 நிமிடங்கள் உருதுவில் பேசி, பின்னர் அதிகமாகப் பேசிய உருதுவிற்குத் தமிழில் மொழியாக்கி உரையாற்றும் இவரது திறமையைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவர்களது சகோதரர்கள் இருவர் எங்களூர் மத்ரஸாக்களில் பணியாற்றியுள்ளனர். வசதியானவர். வணிகப் பின்னணியையும் உடையவர். ஆனால், மார்க்கப் பணியை விடவில்லை. வாணவியல் சம்பந்தமாக அரபி மொழியில் நூல் ஒன்றும் இவர் எழுதியுள்ளார்
 
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!




உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.



குவைத்தில் கடந்த வியாழன் (16.12.2010) மற்றும் வெள்ளிக்கிழமை(17.10.2010)களில் மூன்று இடங்களில் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாக்களில் ஹழ்ரத் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஹழ்ரத் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது.

______________________________________________________

கத்தாரில் கடந்த வெள்ளி கிழமை (17 . 12 . 2010 ) ஜும்மா தொழுகைக்கு பிறகு மன்சூரா - ஜம் ஜம் மஸ்ஜிதில் வைத்து மௌலானா கலீல் அஹ்மது அவர்களுக்காக (மறைமுக ஜனாஸா) தொழுகை நடைபெற்றது பிறகு துஆ செய்யப்பட்டது .

Monday, December 20, 2010

Dr.Javahirullah & Dr. Abdullah Visit Qatar..........

அஸ்ஸலாமு அலைக்கும்........

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் - தலைவர் டாக்டர் பேராசிரியர் M .H . ஜவாஹிருல்லாஹ் அவர்களும்  மனோ தத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களும் கத்தாரில் பல இஸ்லாமிய நிகழ்சிகளில் கலந்துகொண்டார்கள் ........


 தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் எழுச்சி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



அவர் தனது உரையில் இன்றைய உலகில் அமெரிக்கா முதல் சீனா வரை இஸ்லாம் எவ்வாறு எழுச்சிப் பெற்று வருகின்றது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.



 இதன் பின் பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இஸ்லாமும் நான் கடந்து வந்த மதங்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



ஹிந்து மதத்தில் இருந்து தொடங்கி பெரியாரின் தொண்டர் பிறகு பவுத்தம் வரை தான் கடந்து வந்த பாதைகளை விவரித்த பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் பிறகு 2000 முதல் பத்தாண்டுகள் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆய்வுச் செய்து இஸ்லாத்தின் தன்னை இணைத்துக் கொண்டதை விவரித்தார்.



மாநாடு போன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கத்தாரில் வாழும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் இது வரை காணாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் பங்குக் கொண்டனர். இந்நிகழ்ச்சி கத்தாரில் வாழும் தமிழ் அறிந்த மக்களிடையே பெரும் பேரழுச்சியை ஏற்படுத்தியது.


பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் - உடன் BEMCO தமிழ் சகோதரர்கள் சந்திப்பு......


பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ்  - உடன் BEMCO தமிழ் சகோதரர்கள் சந்திப்பு......


டாக்டர் அப்துல்லாஹ் உடன் முஹமது இல்யாஸ்

டாக்டர் ஜவஹிருல்லாஹ் உடன் முஹமது இல்யாஸ்

டாக்டர் ஜவஹிருல்லாஹ் உடன் ரபீக் பாபு


டாக்டர் ஜவஹிருல்லாஹ் உடன் முஹமது சித்தீக்


Saturday, November 6, 2010

Alhamdulillah .......Finished One day Ijthima with successfully

இன்ஷா  அல்லாஹ்...........

அல்லாஹுடைய பெரும் கிருபையால் ............

செப்டம்பர் 14 செவ்வாய் கிழமை ...........காலை 10 மணியளவில் இனிதே தொடங்கியது .......

ஒரு நாள் இஜ்திமா ...........

ஒரு  நாள்  இஜ்திமா  மேடை …



இஜ்திமா மேடை


மௌலானா  மௌலவி  O.M.காஜா மைதீன்  ரப்பானி மற்றும் மௌலானா மௌலவி கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரி அவர்களும்   நிகழ்சி- யை   மிகவும்   அற்புதமாக  தொகுத்து  வழங்கினார்


O.M.காஜா  மைதீன் ரப்பானி  


முதல் அமர்வில் மௌலானா மௌலவி தாவூத் சுலைமான் ரியாஜி தலைமை தாங்க மௌலவி அப்துல் லத்திப் சலாஹி கிராத் ஓத
மௌலவி முஹமது மைதீன் பாகவி  இஸ்லாமிய கீதம் இசைக்க இனிதே ஆரம்பித்தது .........


மௌலவி அப்துல் லத்திப் கிராத் ஓதுகிறார் .....



மௌலவி O .M .முஹம்மது மைதீன் பாகவி கீதம் பாடுகிறார்  

அதை  தொடர்ந்து  மௌலவி  சதகதுல்லாஹ்  மன்பஈ   ,
மௌலவி  முஹமது  ஹசன்  வாஹிதி  அவர்கள்  இஸ்லாத்தில்  இளைகர்களின்  பங்கு  என்ற  தலைப்பில்  துவக்கவுரை  ஆற்றினார்கள் .

 
மௌலவி சதக்கத்துல்லாஹ் மன்பஈ

அதைதொடர்த்து ……..
மதுரை  Sinthanai  சரம்  ஆசிரியர்  மௌலானா  மௌலவி   பீர்  முஹமது  பாகவி  , வேலூர்  அல் குல்லியதுள்  அரபியா இஸ்லாமிக்  கல்லுரி  பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ளரி அவர்கள்  “முன்மாதிரி  முஸ்லிம்  இளைகர் ” என்ற  தலைப்பில் பேசினார்கள்

மௌலவி பீர் முஹமது பாகவி


மௌலவி நூஹ்  மஹ்ளரி 

சமார்  12.50 மணியளவில்  முதல்  அமர்வு  இனிதே  நிறைவடைந்தது அள்ஹம்துளிலாஹ்  ….

2- வது  அமர்வு : - பெண்கள்  அமர்வு  (3:00 to 4:40P.M)

மௌலானா  மௌலவி  அப்துர்  ரஹ்மான்  ஹழ்ரத்(ராஜபாளையம் )  தலைமை  தாங்க மௌலவி 
 முஹமது  மைதீன்  இஸ்லாமிய  கீதம்  பாட  மௌலானா  
அப்துர்  ரஹீம்  Faizi    அவர்கள்  துவக்க  urai ஆற்றி   தொடங்கியது …..



மௌலவி அப்துர் ரஹீம்

 தொடர்ந்து   melappolayam உஸ்மானியா  அரபிக்  கல்லுரி  பேராசிரியர்  மௌலானா  மௌலவி  
P.A.காஜா  மொஹிதீன்  பாகவி  அவர்கள்  “முன்மாதிரி  முஸ்லிம்  பெண்மணி  ”என்ற  தலைப்பில்  
அருமையான  பல  தகவல்கை  வழங்கினார்கள்.

3- வது  அமர்வு :- பல்சுவை  அரங்கம்


மௌலானா  மௌலவி  ஹம்சா  ஹழ்ரத்  அவர்கள்  தலைமையற்றினர்கள் ….

மதரசா  மாணவ  maanavikalin  பல்சுவை  nikalshi நடைபெற்றது  ..

Nikalshiyei  மௌலானா  மௌலவி  ஜமீல்  முஹமது  Faizy,மௌலானா  மௌலவி  வாஹிதி  மற்றும்  சகோ. அப்துல்  சுக்கூர் Msc ,MBA  தொகுத்து  வழங்கினார்கள் .


 
சகோ . அப்துல் சுக்கூர்
4- வது  அமர்வு :- அலசல்  அரங்கம்




தலைப்பு :- ஆனந்தமான  வாழ்கைக்கு  அதிக  பணமா ?  போதும்  என்ற  மனமா?.

நடுவர் :- Prof. அப்துல்  சமத் அவர்கள்(பேராசிரியர் - ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுரி )


பேரா. அப்துல் சமத்

அலசல்  அரங்கம்  அல்ஹம்துளிலாஹ்  ……விறு  விருப்பாக  நடைபெற்றது
கலந்துகொண்ட  ஆலிம்கள் :-
1 மௌலானா  மௌலவி  ஜபருல்லாஹ்  பாகவி 
2  மௌலானா  மௌலவி  ஜாபர்  அலி  மிஸ்பாஹி
3 மௌலானா  மௌலவி  முஹமது  அப்பாஸ்  மிஸ்பாஹி
4 மௌலானா  மௌலவி  வலயுல்லாஹ் சலாஹி
5 மௌலானா  மௌலவி  முஹமது  இத்ரீஸ்  Faizy 
6  மௌலானா  மௌலவி  நசீர்  பைழி
  கலந்துகொண்ட  ஆலிம்கள் மிகவும்  சிறப்பாக  வாதாடினார்கள் குரான் ஹதீத் அடிப்படையில் .

5- வது  அமர்வு  சமுதாய  அரங்கம் …
M .T .K . புரம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜனாப் . சாகுல் ஹமீது (Ex . Army ) அவர்கள் தலைமை தங்கினார்கள் .
சிறப்பு அழைப்பாளர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஜனாப் ஆதம் அலி அவர்கள் சிற்றுரை ஆற்றினார்கள்.
 சிறப்பு  விருந்தினராக  மஹாராஜபுரம்  Higher Sec.School Head Master Ms.கோமளவல்லி  அவர்கள்  மாணவர்களுக்கு  அறிவுரைகள்  வழங்கி இந்த  வருடம்   பள்ளியில்  10th & 12th – இல்  அதிக  மதிப்பெண்கள்  எடுத்த முதல்  3 மாணவ  மாணவிகளுக்கு  நினைவு  பரிசு  வழங்கினார்கள்.


தலைமை ஆசிரியர் கோமளவல்லி அவர்கள் பேசுகிறார்கள்

நினைவு பரிசு வழங்குகிறார்கள் .........

இதை தொடர்ந்து  இந்த  வருடம்  (2010) மௌலவி  பட்டம்  பெற்ற  மௌலவிகளுக்கு  மௌலானா  மௌலவி  ஹாமித்  பக்ரி மன்பயி வாழ்த்தி  “முன்மாதிரி  முஸ்லிம்  சமுதாயம்  “ என்ற  தலைபிலே  அவருடைய  பாணியில் மிக  அருமையாக  உரையாற்றினார்கள் .

இஜ்திமாவின்  கடைசியாக  “இஹ்சான் கல்வி  அறக்கட்டளை ” மூலமாக அல்லாஹ்வின்  கருணையால்  இந்தவருடம்  கல்லூரியில்  படிக்கின்ற  ஏழை  மாணவ  மாணவிகளுக்கு  கல்வி  உதவி தொகை  வழங்க  பட்டது ..


கல்வி உதவி தொகை வழங்கும் போது........

ஹிதாயதுல் இஸ்லாம்  நற்பணி  மன்றம்

லஜ்னதுள்  இஹசானுல் உலமா  சபை
இஹ்சான்  கல்வி அறக்கட்டளை
M.T.K.புரம் முஸ்லிம்  ஜமாத் 

அனைவரும்  இணைத்து  இஜ்திமா  சிறப்பாக  நடைபெற  அயராது  உழைத்தார்கள் . Alhamdulilah……
கல்வியில்  நமது  சமுதாயம்  முன்னேற  வேண்டும்  என்ற  நல்ல  நோக்கத்தில்  இந்த  இஜ்திமா  இனிதே  நிறைவு  பெற்றது …..Alhamdulilah………
மென்மேலும்  “இஹ்சான் கல்வி அறக்கட்டளை  “ வளர  துஆ  செய்வதோடு   பொருளாதார  உதவி  செய்து அறக்கட்டளை வளர ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

எல்லா புகழும்  அல்லாஹ்  ஒருவனுக்கே ............
வஸ்ஸலாம்                                         தொகுப்பு :- O .M . முஹமது இல்யாஸ் - கத்தார்
  





Sunday, August 29, 2010

One Day Manadu...

இஸ்லாமிய  ஷரியத்  மாநாடு இன்ஷாஅல்லாஹ் ................

Tuesday, August 3, 2010

Ihsaan Educational Trust _ Help for Education

கல்விக்காக உதவிடுங்கள்

Saturday, July 17, 2010

After Salah ......

தொழுகை முடிந்த உடன் ஓத வேண்டிய துஆக்கள் 

Thursday, July 15, 2010

Iqsaan Kalvi Arakkattalai

இக்ஸான்  கல்வி  அறக்கட்டளை
மஹாராஜபுரம்

Wednesday, July 14, 2010

Lajnadul Iqsaan Ulama Sabai

In The Name Of Allah......

லஜ்னதுல்  இஹ்சான்   உலமா  சபை

மஹாராஜபுரம்